உத்தரபிரதேச காவல்துறையை நினைத்து வெட்கப்படுகிறோம் – கமல்ஹாசன்
உத்தரபிரதேச காவல்துறையை நினைத்து வெட்கப்படுகிறோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். அப்பொழுது போலீசார் தடுக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார் ராகுல் காந்தி.இதன் பின் தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள பதிவில் ,அரசியல் அநாகரிகத்தின் உச்சம். உத்தரபிரதேச காவல்துறையை நினைத்து வெட்கப்படுகிறோம். இத்தகைய குண்டர்களுக்கு நாம் வாக்களித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
Nadir of political misbehavior! Shame on UP Police. We, the people, voted for such thuggery. Irrespective of the party and its philosophy, rancour and hate will only breed and multiply, unless condemned by the majority.
— Kamal Haasan (@ikamalhaasan) October 1, 2020