வெட்கம் கெட்ட திமுக-ஹெச்.ராஜா தாக்கு
மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு தந்தார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார். அன்று அதை செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.