மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா? ஆசிரியர் கீ.வீரமணி எச்சரிக்கை..!

Default Image

அனைத்தையும் தன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவர பி.ஜே.பி. அரசு துடிக்கலாமா? என ஆசிரியர் கீ.வீரமணி கேள்வி. 

மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை இறுதி செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து திராவிட கழக தலைவர் எச்சரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார்.

veeramani 1

அந்த ட்விட்டர் பதிவில், ஒன்றிய அரசுக்கும் – உச்சநீதிமன்றத்திற்கும் மோதல். அனைத்தையும் தன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவர பி.ஜே.பி. அரசு துடிக்கலாமா? மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா? அரசமைப்பும், ஜனநாயகமும் இல்லாத நாடாகிவிடும், எச்சரிக்கை!

ஆனால், மற்ற இரு துறைகளிலும், ஏக அதிகாரத்தை செலுத்தி, தங்களுக்குக் கிடைத்துள்ள ‘ரோடு ரோலர்’ மெஜாரிட்டியைப் பயன்படுத்தி, நீதிமன்றம் தவிர, மற்ற இரண்டையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தன்வயப்படுத்திக் கொண்டது பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி.

சுதந்திரமாக இயங்கவேண்டிய சி.பி.அய்., என்ற மத்தியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாகவும், தற்போதும் நடைபெற்று வரும் நிகழ்வுகளே அதற்கான போதிய சான்றாவணங்கள் – சாட்சியங்கள் ஆகும்!

நீதித் துறைக்கே சட்ட அமைச்சர் சவால் விடலாமா? உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் கொடுத்த பகிரங்க வாக்குறுதி நீர்மேல் எழுத்துக்களாகிவிட்டன!

கொலீஜியம் ஒரு நீதிபதியின் பெயரை பரிந்துரைத்தவுடன், ஒன்றிய அரசு 30 நாள்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (என்.ஜே.ஏ.சி) சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, நாடாளுமன்ற இறையாண்மைக்கு எதிரானது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

எனவே, கொலீஜியம் அமைப்பின் நடை முறைகளில் வேறுபாடுகள் இருந்தால்கூட அதை ஏற்கவேண்டியது ஒன்றிய அமைச்சர் மற்றும் அரசின் கடமை’’ என்று தெரிவித்தார். ஒன்றிய அரசும் – உச்சநீதிமன்றமும் மோதிக்கொள்வது சரியா?

நாடு எவ்வளவு கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ளது – நீதித்துறைதான் மக்களின் கடைசி நம்பிக்கை. அதன் அடிக்கட்டுமானமே தோண்டி இடிக்கப்படும் அநியாயம் வரலாமா? என்பது பொதுவானவர்களின் கேள்வி. பிறகு அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் எதுவும் இல்லாததாக ஆகிவிடக்கூடும்!  பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்