கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் ..!
தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
நாளை தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் பயன்படுத்தி உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்தி கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டம் பவானியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்நதெடுக்கப்பட்டு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.