“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” தமிழகத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி பகீரங்க குற்றச்சாட்டு.!!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
திருச்சி நாவலூர் குட்டப்பட்டுவில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில் இந்திரா பானர்ஜி பங்கேற்றார். இந்த மாநாட்டில், இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலையில் நடைபெற்ற அமர்வில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆண் பெண் சமத்துவத்தில் முன்னோடி மாநிலமான தமிழகத்திலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கூறினார்.
DINASUVADU