Breaking:பாலியல் புகார் – சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நேரில் ஆஜர்..!

Default Image
  • பாலியல் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக,சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில்,சுசில் ஹரி பள்ளி நிர்வாகிகள் 3 பேர் தற்போது நேரில் ஆஜராகியுள்ளனர்.
  • ஆனால்,சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் இன்று ஆஜராஜவில்லை.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர்,சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்.

மாணவி சமூக வலைதளத்தில் கூறியதாவது:

  • “பத்தாம் வகுப்பு முடிக்கும் தருவாயில் இருந்த பொழுது,பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா என்னை அழைத்து என்னுடைய ஆடைகளை கழட்ட முயன்றார். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.மேலும் நான் அவரிடம்  இதை என்னால் செய்ய முடியாது என்று கூறினேன்.ஆனால்,அவர் தன்னை “இறைவன் கிருஷ்ணா” என்று கூறி பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தினார்.
  • ஆனால்,அதை ஒருபொழுதும் என்னால் செய்ய முடியவில்லை,அதனால் அவர் மிகவும் கோபமடைந்தார்.அதுமட்டுமில்லாமல் குழு உடலுறவுக்கு அவர் எப்போதும் என்னை அழைப்பார் நான் ஒருபோதும் அதற்கு செல்ல விரும்ப மாட்டேன்.
  • ஆனால் ஒருமுறை உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நான் சென்றேன் அப்போது அவர் சிறுமிகளுக்கு விலை உயர்ந்த மதுபானங்களை கொடுத்து குழுவாக உடலுறவு செய்தார்.மேலும் அன்பு, கடவுள் என்கின்ற பெயரில் மாணவிகளை உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அவர் தூண்டுவார்”,எனப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, அப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

ஆனால்,அங்கு சிவசங்கர் பாபா இல்லாத நிலையில்,மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வருகின்ற 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.

  • இந்நிலையில்,சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில்,சுசில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன்,வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.ஆனால்,சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் இன்று ஆஜராகவில்லை.
  • இதனையடுத்து,பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாகவும்,சிவசங்கர் பாபா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க நினைக்கிறாரா?,மற்றும் ஆணையம் முன் அவர் ஆஜராகாததற்கு வேறு காரணம் உண்டா?..,அல்லது விளக்கக்கடிதம் ஏதேனும் சிவசங்கர் பாபா கொடுத்துள்ளாரா? என்று ,குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கேள்வி எழுப்பி,பள்ளி நிர்வாகிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்