பெண் ஐ.பி.எஸ்-க்கு பாலியல் தொல்லை- 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம்..!

Published by
murugan

பெண் ஐ.பி.எஸ்-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு  வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார்.

பின்னர், சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி 2 பேருக்கும் சம்மன் அனுப்பி நாளை மறுநாள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

ஈராக்கில் புதிதாகப் பிறந்த 100 குழந்தைகளுக்கு “நஸ்ரல்லா” என்று பெயர் சூட்டல்.!

ஈராக்கில் புதிதாகப் பிறந்த 100 குழந்தைகளுக்கு “நஸ்ரல்லா” என்று பெயர் சூட்டல்.!

ஈராக்: ஹிஸ்புல்லா அமைப்பை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

26 mins ago

ஐசிசி தொடரில் முதல் முறை! ஐபிஎல்லை தொடர்ந்து சர்வதேச போட்டியிலும் களமிறங்கும் தொழில்நுட்பம்!

ஷார்ஜா : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு…

41 mins ago

மாரடைப்பு வருவதற்கான முன் அறிகுறிகள் என்ன? முறையாக CPR கொடுப்பது எப்படி?

சென்னை -மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி சிகிச்சையை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து…

54 mins ago

18 ஓடிடி, 150 டிவி சேனல்! ஜியோவை காலி செய்யப் போகும் எக்ஸைடெல் நிறுவனம்?

சென்னை : கடந்த 2016-ம் ஆண்டில் ஜியோ நிறுவனம் உருவெடுத்த போது இலவச இன்டர்நெட்டில் தொடங்கி அதன் பிறகு குறைந்த…

1 hour ago

மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.!

சென்னை : பாம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. பூஜைக்கு வந்தவர்களை அவமான படுத்தும் விஜயா.!

சென்னை - சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 3] எபிசோடில் ரோகினி நடத்தும் ஆன்லைன் கிளாஸை விஜயா  திறந்து வைத்தார்…

1 hour ago