பாலியல் தொல்லை புகார் – சிறப்பு டிஜிபி மீதான வழக்கு ஆக.23ம் தேதி ஒத்திவைப்பு!!
பெண் போலீஸ் அதிகாரி பாலியல்தொல்லை புகாரில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்.
பெண் போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லை புகாரில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆஜராகாத நிலையில், வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்து.
இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, விசாரித்திருந்தனர்.
இதையடுத்து, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்திருந்தனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.