ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பல ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிபதி மகாராஜன் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை கெபிரஜை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மேலும் மூன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக அடையாறு கேந்திரய வித்யாலயா, கேளம்பாக்கம் சுஷில் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் நாமக்கல்லில் உள்ள பள்ளி ஒன்றுக்கும் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பற்றி விளக்கம் தர சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…