பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகரானுக்கு 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் மே-29-ல் பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நாகராஜனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், காவல்துறை தன்னை கைது செய்ய வருவார்கள் என்று பயந்து நாகராஜன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின் ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நாகராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சிகிச்சை முடிந்த நிலையில் மே 29-ஆம் தேதி காவல்துறை நாகராஜனை கைது செய்து செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தடகளப் பயிற்சியாளர் நாகராஜனுக்கு ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…