என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவதூறாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
13 வருடங்களுக்கு முன்பு ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற ‘வீழமாட்டோம் ‘ என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர்.
ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர்.கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்தார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை.உண்மையைக் காலம் சொல்லும்.’ என தெரிவித்தார்.வைரமுத்துவின் பதிவிற்கு ‘பொய்யன்’ என சின்மயி பதிலளித்தார்.
இதேபோல் பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீதும் சின்மயி புகார் தெரிவித்திருந்தார்.தற்போது பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், MeToo மூலம் என்னைப் பற்றி துரதிர்ஷ்டவசமாக அவதூறான தகவல்கள் வெளியாகியுள்ளது.என்னைப் பற்றி வெளியிடப்பட்ட அவதூறு செய்திகளை நான் உறுதியாக மறுக்கின்றேன்.என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவதூறாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்று பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…