சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை..!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனையை சேலம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் மல்லியக்கரை பகுதியை சார்ந்த மணிகண்டன், ராமசந்திரன் ஆகிய இருவரும் அதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு ராமசந்திரன் மனைவி செல்வியும் உடன் இருந்திருக்கிறார். இதுகுறித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்றுவந்த இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சேலம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மணிகண்டன், ராமசந்திரன் மற்றும் ராமசந்திரன் மனைவி செல்வி ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் ஏற்கனவே மணிகண்டன் உயிரிழந்ததால் ராமசந்திரன், அவரது மனைவி செல்வி ஆகிய இருவரையும் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025