பள்ளி மாணவிக்கு மயக்க மருத்து கொடுத்து…11வகுப்பு மாணவன் செய்த காரியம்!
இந்த கொடூர சம்பவம் ஆனது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நடந்துள்ளது. வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது படிக்கும் மாணவன் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11வது படித்து வரும் மாணவியோடு நட்பாகப் பேசி பழகி வந்துள்ளான்.சம்பவத்தன்று நட்பாக பேசி மாணவியை தனியே அழைத்துச் சென்ற மாணவன் தனது நண்பர்கள் இருவரின் துணையோடு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளான்.அவனை நம்பி மாணவியையும் குளிர்பானத்தை அருந்தியுள்ளார்.
இதனால் மயக்கமடைந்துள்ளார் மாணவி. 11வது படிக்கும் அந்த மாணவன் மற்றும் 2 நண்பர்கள் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.மயக்கம் தெளிந்த தனக்கு நடந்தை அறிந்து பெற்றோர் மூலம் அம்மாணவி கொடுத்த புகாரின் பேரில் 11ஆம் வகுப்பு மாணவனை கைது போலீசார் செய்துள்ளனர்.மேலும் அம்மாணவின் நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.கூடா நட்பு கேடாய் முடிந்ததுள்ளது.