சென்னையில் அம்பத்தூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரகடம் முதலி தெருவில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸ் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
சோதனையில் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தொழிலுக்கு பயன்படுத்திய 5 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். அதனையடுத்து அந்த இளம்பெண்களை போலீசார் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்து விட்டனர். அதனையடுத்து மசாஜ் சென்டர் என்று கூறி பாலியல் தொழில் செய்த சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…