பாலியல் வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மீண்டும் மனு..!

தன் மீதான பாலியல் வழக்கு ஆந்திராவுக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குத் தடை விதிக்கவும் தனது மனுவில் ராஜேஷ் தாஸ் கோரிக்கை வைத்துள்ளார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணையை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை அரசு தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ள நிலையில் ராஜேஷ் தாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.