வானதி சீனிவாசன் உட்பட ஏழு பாஜகவினர் விடுதலை..!

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் வானதி சீனிவாசன் உட்பட ஏழு பாஜகவினர் விடுதலை.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிட்டார். அப்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் வானதி சீனிவாசன் உட்பட 7 பேர் மீது புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்கு கோவை 5 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகிய 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025