உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு – காவல் துறை

Default Image

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று காவல்துறை தலைமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,594 மனுக்கள் காவல்துறையில் பெறப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மனுக்களில் 244 மனுக்கள் நீதிமன்றம் மற்றும் வேறு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காரணத்தினால், புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து மனுக்கள் மீது விசாரணை முடிக்கப்பட்டது. மீதம் உள்ள 1,350 மனுக்களில், நேற்று முன்தினம் வரை 938 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது.

தீர்வு காணப்பட்ட மனுக்களில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு தொடர்பாக 291 மனுக்களும், சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும், சட்ட விரோத நடவடிக்கை கட்டுப்படுத்த கோரி 70 மனுக்களும், காவல் நிலைய சேவைகள் வேண்டி 51 மனுக்களும், குடுமப தகராறு தொடர்பாக 58 மனுக்களும், இதர காரணங்களுக்காக 190 மனுக்களும் அடங்கும்.

நிலுவையில் உள்ள 412 மனுக்கள் மீது விசாரணை நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டு, இன்னும் சில நாட்களுக்குள் தீர்வு கண்டு முடித்து வைக்கப்படும் என்று காவல்துறை தலைமை தெரிவித்துள்ளது. தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மூலம் பெறப்பட்ட மனுக்களை 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்