பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு நேராக 650மீ தொலைவில் கடலுக்கு நடுவே ஓர் பேனா சிலை அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கலந்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறது.
அண்மையில் கூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தால் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. அதிலும் , பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதிலும் ஆதரவு குரலும், எதிர்ப்பு குரலும் எழுந்தன.
இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் வைத்து திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், கலைஞர் கருணாநிதியின் சங்கத்தமிழ் காவியத்தின் அடையாளம் தான் பேனா. என குறிப்பிட்டார்.
மேலும், குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு
தெரிவிக்காதவர்கள் தான் தற்போது பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான பிரச்சாரம் தேவையற்றது. எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…