தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம்! – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு.
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் 10 கி.மீ வரை ரூ.2,000 மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் ஒவ்வொரு கிமீ.க்கும் ரூ.50 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
இதுபோன்று சாதாரண ஆம்புலன்சுகளில் 10 கி.மீ வரை ரூ.1,500 என்றும் அதற்கு மேல் ஒவ்வொரு கிமீ.க்கும் ரூ.25 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸில் 10 கி.மீ வரை ரூ.4,000 கட்டணம் என்றும் அதற்கு மேல் ஒவ்வொரு கிமீ.க்கும் ரூ.100 கட்டணம் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.