இன்று முதல் மாநிலங்களுக்குள்ளான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்!

Default Image

தமிழகத்தில் இன்று முதல் மாநிலங்களுக்குளான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியது.

தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 1,184 அரசு விரைவு பேருந்துகள் உள்ளனர்.

இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளது. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு, 4 ஆம் தேதி முதல் தொடங்கியது. பேருந்து சேவைகள் தொடங்கவுள்ள நிலையில், விரைவு போக்குவரத்துக்கு கழகம் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அறிவுரைகள் வழங்கியது.

அதில், கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும் எனவும், நள்ளிரவு- காலை 04.00 மணி வரை நடத்துனர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை அதிகம் இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் போன்ற சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்