கோடையில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல்…! ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டுகோள்…!
தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.
நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் கோடைவெயிலின் தாக்கமும், மக்களை வாட்டி வதைக்கிறது. இதனையடுத்து, மக்களுக்கு உதவும் வாகையில், கோடைவெயில் காரணமாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் தொண்டர்கள் வழங்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.