பரபரப்பு : அமமுக நிர்வாகி வெட்டி கொலை..!
அமமுக நிர்வாகி சுப்பிரமணியன் மர்ம கும்பலால் வெட்டி கொலை.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு வயது 40. பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் இவர், கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது மர்ம கும்பல், வீட்டுக்குள் நடந்து சென்ற அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
நெல்லை மாநகர மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக கொலை நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காவல்துறையினர் கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.