தொடர் விபத்து : காவல் வாகனத்தை தொடர்ந்து உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து..!

காவல் வாகனத்தை தொடர்ந்து உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.
வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, நீலகிரி அருகே பார்லியர் மலைப் பகுதியில் 13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்துக்கு உள்ளான நிலையில், தற்போது உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால், விபத்துக்குள்ளான அமரர் ஊர்தியில் இருந்து, உடல் மற்றோரு வாகனத்திற்கு உடல் மாற்றப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025