சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2 ஆக பிரிப்பு – சட்ட மசோதா தாக்கல்.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை அண்ணா அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் என்றும் அண்ணா தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.