’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வரவுள்ளார். இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்ப்பட்டது.
தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து அவையிலேயே அமர்ந்திருக்கிறார் ஆளுநர். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் நாளை சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்..! மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கீடு
அதன்படி, மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழியவுள்ளார்.