#BREAKING: மேகதாது அணை-சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்..!

Default Image

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தனி தீர்மானம்:

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென நினைக்கிறேன். காவிரி நடுவர் மன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது.  மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது:

மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியும் மத்திய அரசு அளிக்கக்கூடாது. 2018 உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் குறிப்பிடாத, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை  பரிசீலிக்கவோ, அனுமதி தரக்கூடாது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரியில் எந்தவிதமான நீர் தேக்கத்தையும் கட்டக்கூடாது என கர்நாடகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்