கோயில்களில் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசிக்க தனிவரிசை அமைத்துக்கொடுக்க, இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கோயில்களில் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி தரிசனம் செய்கின்றனர். இதற்காக பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என இருந்தாலும், சிறப்பு தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்பட்டு, தரிசனம் கிடைக்கபெறுகிறது.
சிறப்பு தரிசனத்திற்கு நேரம் குறிப்பிடாமல் டோக்கன் வழங்கப்படுவதால், நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் தான் தரிசனம் செய்கிறார்கள். இதனை தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச்சேர்ந்த ஒருவர் பொதுநலவழக்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
பக்தர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வுக்கு முன் வந்தது.
இதற்கு அரசு தரப்பில், ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை பின்பற்றப்படுவதாக தெரிவித்தது, மேலும் டோக்கனில் வழிபாட்டு நேரம் குறிப்பிட்டு வழங்குவது இயலாதது என்று கூறப்பட்டது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பக்தர்களுக்கு தரிசனம் செய்ய, இந்து சமய அறநிலையத்துறை 12வாரங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…