மாற்றுத்திறனாளி, கர்ப்பிணிகளுக்கு கோயில்களில் தனிவரிசை; அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

கோயில்களில் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசிக்க தனிவரிசை அமைத்துக்கொடுக்க, இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கோயில்களில் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி தரிசனம் செய்கின்றனர். இதற்காக பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என இருந்தாலும், சிறப்பு தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்பட்டு, தரிசனம் கிடைக்கபெறுகிறது.

சிறப்பு தரிசனத்திற்கு நேரம் குறிப்பிடாமல் டோக்கன் வழங்கப்படுவதால், நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் தான் தரிசனம் செய்கிறார்கள். இதனை தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச்சேர்ந்த ஒருவர்  பொதுநலவழக்காக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

பக்தர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வுக்கு முன் வந்தது.

இதற்கு அரசு தரப்பில், ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு வழிபாட்டு முறை பின்பற்றப்படுவதாக தெரிவித்தது, மேலும் டோக்கனில் வழிபாட்டு நேரம் குறிப்பிட்டு வழங்குவது இயலாதது என்று கூறப்பட்டது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பக்தர்களுக்கு தரிசனம் செய்ய, இந்து சமய அறநிலையத்துறை 12வாரங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்