சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக தலைவர்களை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து வரும் காரணத்தால், பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்வதாக அறிவித்தது.
இந்த கூட்டணி முறிவு அறிவிப்பை அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் வரும் 2023 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை அடுத்து, தமிழக அரசியலில் மற்ற கட்சிகளின் கூட்டணி முடிவுகள் மாறும் சூழல் இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிக முக்கியமாக நாம் தமிழர் கட்சி – அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், நாம் தமிழர் கட்சி வரும் 2023 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடும் என தெரிவித்தார்.
இலங்கையில் போர் நடைபெறும் போது இந்திய அரசு இந்தியாவில் இருந்து அமைதிப்படையை அனுப்பியது. அப்போது அங்குள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது , மூப்பனார், பா.சிதம்பரம் ஆகியோர் நினைத்து இருந்தால் இதனை தடுத்து இருக்கலாம். ஆனால் யாரும் அதனை செய்யவில்லை. தமிழராய் பிறந்தவரெல்லாம் தமிழனல்ல என்று குறிப்பிட்டார்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சி, எங்கும் தமிழ். எதிலும் தமிழ் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா.? என்று சீமான் கேள்வி எழுப்பினர்.
அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கேட்கையில், அவர் தனது பாதையாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டார் என நினைக்கிறன். திரும்ப தொடங்கியுள்ளாரா தெரியவில்லை. இப்போதைக்கு அவருக்கு நடக்க நேரமிருக்காது. அடுத்து யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று யோசித்து கொண்டு இருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…