இன்று வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்..!
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நேற்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று வேளாண்மைத் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து கடந்த ஜூன் மாதம் 16 வது சட்டசபையின் முதல் அமர்வில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.