டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 8 முதல் 20 ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதனால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. பின்னர் மீதமுள்ள 600கும் மேற்பட்டோரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறியுள்ள சுகாதாரத்துறை, மீதமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மாநாட்டில் பங்கேற்றவர்களின் மீது மததுவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது என சரத்குமார் குறிப்பிட்டார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…