SenthilBalaji: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்.! சென்னை ஐகோர்ட் உத்தரவு.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு உத்தரவிட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்த எந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என்றும் அனைத்து கோப்புகளையும் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கே மாற்றவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற முதன்மை நீதிமன்றமே சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டது.