senthilbalaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல்!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

அதாவது, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டனர். ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க கோரி அவரது தரப்பில் மீண்டும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ரவி அறிவுறுத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது எனவும் நீதிபதி ரவி கருத்து தெரிவித்தார். இதனால் ஜாமீன் மனு விசாரணை மீது குழப்பம் நீடித்து வந்தது.

இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு மூலம் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்று குழப்பத்துக்கு தீர்வு கிடைத்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலியிடம் முறையிட்டு உள்ளனர். முறையீட்டை ஏற்று நீதிபதி அல்லி மனுதாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

14 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

15 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

15 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

16 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

17 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

17 hours ago