என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு நாள்களுக்கு முன் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அதில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சோமசுந்தரம் என்பவர் அந்த வீடியோவை பதிவு செய்தவர் எனவும், குகன் என்பவர் அந்த வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நிலையில், சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில்வாசனை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…