ஓபிஎஸ் நீக்கத்தை அடுத்து, பழனிசாமி அணியில் இணைந்தார் செந்தில் முருகன்!
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் இபிஎஸ் அணியில் ஐக்கியமானார்.
தனித்தனியே வேட்பாளர்கள் அறிவிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி தனித்தனியே வேட்பாளர்கள் அறிவித்தனர். இதில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக தென்னரசும், ஓ.பன்னீர்செல்வம் அண்ணி சார்பாக செந்தில் முருகனும் அறிவிக்கப்பட்டனர். இருவரும் தனித்தானியே வேட்பாளர்களை அறிவித்ததால் குழப்பம் நீடித்தது.
ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்:
அதுமட்டுமில்லாமல், இரட்டை இலை சின்னம் கிடைக்குமா, அப்படி கிடைத்தால் எந்த அணிக்கு கிடைக்கும் எனவும் சந்தேகம் எழுந்தது. இதனிடையே, இரு வேட்பாளர்களை நிறுத்தியத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் எனவும் அச்சம் நிலவியது. பாஜகவும் இபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் தந்தது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்திருந்தது.
ஓபிஎஸ் தரப்பு விமர்சனம்:
இதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இதன்பின், இடைத்தேர்தலில் இரட்டை சின்னத்தில் இபிஎஸ் நிறுத்திய வேட்பாளர் தென்னரசு போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார். வரலாற்று தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் என ஓபிஎஸ் தரப்பு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தது.
ஓபிஎஸ் ஆதரவாளர் இபிஎஸ் அணியில் ஐக்கியம்:
இந்த சமயத்தில், ஓபிஎஸ் அணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்.