#Breaking : தென்னரசுக்கு ஆதரவில்லை.. இரட்டை இலை வெற்றி பெற வேண்டும்.! ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்.!
இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். ஆதலால், அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுகிறார். – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல ஓபிஎஸ் தரப்பில் செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்துகேட்டு வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்களை இன்று மதியம் 3 மணிக்கு அளிக்க உள்ளனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில், இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். ஆதலால், அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுகிறார் என அறிவித்து விட்டனர். மேலும், தாங்களும் தேர்தல் பரப்புரை செய்வோம். ஆனால் தென்னரசுவுக்காக அல்ல. இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என பிரச்சாரம் செய்வோம் என செய்தியாளர்களின் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.