ஈரோடு கிழக்கு இடைதேர்த்லில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த செந்தில் முருகன் நீக்கம் – ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கம்.
ஓபிஎஸ் அணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
செந்திமுருகன் நீக்கம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.
கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், திரு. B. செந்தில் முருகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.