Minister Senthil balaji [File Image]
செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அதில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனையை இரவு 11 மணிக்கு முடித்துவிட்டது. அதன் பிறகு நள்ளிரவு 1.40 மணிக்கு தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த மூன்று மணி நேரத்தில் என்ன நடந்தது என்றும், இந்த கைது நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டவிரோதமாக நடைபெற்றது என்றும் கூறி, ஆதலால் நீதிமன்ற காவலை ரத்து செய்ய கூறி ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தோம் என்றும். அது முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும். ஆதலால் தற்போது செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்ய பிரமாண பாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தரில் எந்தவிதமான சட்ட விதிமுறைகளும் கைது நடவடிக்கை நடைபெறவில்லை என்றும், சட்டப்படி தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்கள் கலைக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமலாக்கத்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது .
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…