செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.
அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்யப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியான போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இருந்தது. மூன்றாவது நீதிபதி முன் விசாரணை தொடங்கி நடைபெற்ற போது இரு தரப்பும் தங்கள் விளக்கங்களை தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து ஜூலை 11,12க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில். இன்று விசாரணை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வாதிடுகையில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் அமலாக்கத்துறை வசம் இல்லை. மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. தவிர புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…