அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று காலை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை, அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதுமட்டுமில்லாமல், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து, வரும் 12ம் தேதி வரை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சற்று நேரத்தில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க உள்ளார். அமலாக்கத்துறை காவலில் கோரிய வழக்கில் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை காணொளி வாயிலாக ஆஜர்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…