செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ரத்தாகுமா.? உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.!

MInister Senthil balaji

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யும் கோரிக்கையானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

அமலக்கத்துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்போது ஜூன் 28வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அவர் அப்போதே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

இதற்கிடையில், அமலாக்கத்துறையினர், தாங்கள் செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இருந்தனர். ஆனால், அவருடைய உடல்நிலை விசாரணைக்கு ஒத்துழைக்காததால், மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த காரணத்தால் விசாரணைக்கு எடுக்க முடியவில்லை என அமலாக்கத்துறையினர் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் கூறியிருந்தனர். நீதிமன்ற காவல் நாளை முடியும் காரணத்தால் அவர் நாளை காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்து இருந்தார். ஏற்கனவே இந்த வழக்கின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளார்.

அந்த பிரமாண பத்திரத்தில், சட்டவிரோதமாக தனது கணவர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். இன்று இந்த நீதிமன்ற காவல் ரத்து தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் அவருக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin
chicken pox (1)
orange alert tn