அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்ற செந்தில் பாலாஜியின் பெயர்..!

tamilnadu government

அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் பட்டியலில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மதுவிலக்கு ஆயத்ததீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அண்மையில் அமலாக துறையினர் கைது செய்த நிலையில், 8 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உயர் சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக்கூடாது என ஆளுநர் குறிப்பிட்ட பிறகும் தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் பட்டியலில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளது.

tnministers
tnministers [Imagesource : tngovt]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்