செந்தில் பாலாஜி இருக்கும் காவேரி மருத்துவமனையில் “SAG” பிரிவினர் பாதுகாப்பு!
சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கும் 7-ஆவது தளத்தில் SAG பாதுகாப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையின் 7-ஆவது தளத்திற்கு மட்டும் SAG பிரிவி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவாயில் மற்றும் தரைத்தளம் பகுதிகளில் காவலர்கள், ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மற்றும் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்ககோரிய மனு மீது நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.
இதில், செந்தில்பாலாஜியை வரும் 23ம் தேதி வரை, 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் எனவும் நிபந்தனையுடன் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையின் 7-ஆவது தளத்திற்கு மட்டும் SAG பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.ஏ.ஜி. பிரிவினர் என்பது சைபர் செக்யூரிட்டி சேவைகள், தடுப்பு சோதனை மற்றும் தடயவியல் சேவைகளை வழங்குகின்றன.