Extension of judicial custody of Senthil Balaji [file image]
Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அமலாத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்தும் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது, தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து வருகிறது.
இதனிடையே, செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் பட்சத்தில், மேலும் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…