முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற கவலை 22-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்து 8 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி சமீபத்தில் தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார்.
உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு – பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து!
இவரின் ராஜினாமா கடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதலும் அளித்திருந்தார். செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து சென்னை உயர்நீதிமன்ற காரசார கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்கு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. புழல் சிறையில் இருந்து காணொளி வாயிலாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், அவரின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…