அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையில் தீர்ப்பு ஒத்திவைப்பு.!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவு.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்ககோரிய அமலாக்கத்துறையின் மனு, இடைக்கால ஜாமின் வழங்கவேண்டும் என கோரிய மனு மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான மனுக்களின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்கொணர்வு மனு மீதான உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்றதும் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என அனுமதி வழங்கி உத்தரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.