அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் விசாரணை.!
பிற்பகல் 3.30க்கு செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது .
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறை நிர்வாக கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி அமைச்சர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 3.30க்கு நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல, அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் தரப்பு விசாரணைக்கு அழைத்து செல்ல அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக நீதிமன்ற காவலை ரத்து செய்ய கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.