ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கும் செந்தில் பாலாஜி செல்வார் – அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்.!
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை குறை சொல்லி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபோது தன் உடலில் உயிர் இருக்கும் வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று பேசி இருந்ததை சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி தற்போது மு க ஸ்டாலின் பக்கம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கும் செந்தில் பாலாஜி செல்வார் என அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விமர்சித்தார்.