சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியை தொடர்ந்து, நேற்று புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அங்கு அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, 2வது நாளாக இன்று காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது அமலாக்கத்துறை.
முன்னதாக இன்று காலை 9 முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தற்போது செந்தில் பாலாஜியிடம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணை நடைபெறுவதால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமில்லாமல் செந்தில் பாலாஜியிடம் கேட்பதற்கு 200 கேள்விகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தினமும் 50 கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…