செந்தில் பாலாஜி கைது செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
அமலாக்கத்துறையினர் காவலில் எடுக்க உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தும் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கைது செய்ய அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பு வழங்கி, 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து, வரும் 12ம் தேதி வரை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.